Movie prime

தமிழ்நாட்டில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!! இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி!!

 
election commission
இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து உள்ளது. இந்த உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.

கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
all party symbols
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாமல் இருந்து வந்தால், அந்த காட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின் படி, தமிழகத்தில் செயல்படாத 7 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.