Movie prime

மத்திய அரசு அதிரடி!! அரசு ஊழியர்களுக்கு அதிரடியாக உயரும் சம்பளம்!!

 
Money
மத்திய அரசு ஃபிட்மெண்ட் காரணி குறித்து விரைவில் முடிவு செய்து இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஃபிட்மெண்ட் காரணி அதிகரித்தால் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவை  சிறப்பித்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அந்த அறிவிப்புகளில் குறிப்பாக அரசாங்க பணியில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி மூன்று சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.  
money 3
இந்நிலையில், ஃபிட்மெண்ட் காரணியை மத்திய அரசு உயர்த்தப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபிட்மெண்ட் காரணி உயர்ந்தால், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, சம்பளம் மற்றும் ஓய்வூதியம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து  AICPI தரவுகளின்படி, இந்த மாதம் அகவிலைப்படியில் 4% முதல் 5% வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஐம்பத்திரண்டு லட்சத்துக்கும் மேல் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுவர்களுக்கும் சம்பளம் உயரும் என்று கூறப்படுகிறது.
money 2
மேலும் இந்த மாதம் ஃபிட்மெண்ட் காரணி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் மத்திய அரசில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பளம் இரண்டரை மடங்குக்கு மேல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை, ஊழியர்களின் ஃபிட்மெண்ட் காரணி 2.57 மடங்கு என்ற விகிதத்தில் உள்ளது.