Movie prime

மத்திய அரசு அதிரடி!! வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதிக்கு தடை!!

 
wheat
கோதுமைக்கு உலக அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தியாவிலும் கோதுமையின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் கோதுமை தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒட்டுமொத்த இந்தியாவின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், அண்டை நாடுகள் மற்றும் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகும் நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் சிலருக்கு மட்டும் இந்த ஏற்றுமதியில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏற்றுமதி செய்ய முன் பணம் வாங்கி இருந்தால் அதற்கான ரசீதை காண்பித்து ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.