ஜார்க்கண்ட் மாநில முதல்வர் பதவி நீக்கம்!! எம்.எல்.ஏ. பதவியில் இருந்தும் நீக்கம்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஊழல் குற்றச்சாட்டை அடுத்து, அவரிடம் இருந்து எம்.எல்.ஏ., பதவியும் பறிக்கப்பட்டுள்ளது. சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அந்த மாநில ஆளுனருக்கு பரிந்துரைத்துள்ளது.
இதனது தொடர்ந்து, அவரது முதல்வர் பதவியும் பறிபோக உள்ள சம்பவம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஹேமந்த் சோரன் முதல்வராக இருந்து வருகிறார். அந்த மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
அந்த மாநிலத்தில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில் பெரிய முறைகேடு நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதில் ஹேமந்த் சோரன் தனது பெயரில் சுரங்க ஒதுக்கீட்டை பெற்றுள்ளார்.
இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என்று பா.ஜ.க. தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது. இதன் காரணமாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ. பதவியை பறிக்க மாநில கவர்னருக்கு பரிந்துரைத்தது. இதனால் அவரின் எம்.எல்.ஏ. பதவியோடு சேர்த்து முதல்வர் பதவியும் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.