Movie prime

மக்களே உஷார்!! இன்று முதல் பணப்பரிவர்த்தனைக்கு ஆதார் மற்றும் பான் கட்டாயம்!!

 
Money
இனி வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை பணம் எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்யும் போதோ கண்டிப்பாக குறிப்பிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளில் புதிதாக கணக்கு தொடங்கும் போதும் வாடிக்கையாளர்கள் தங்களது பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும்.
adhaar
இந்நிலையில், ஒரு நிதியாண்டில் ரூ.20 லட்சத்துக்கும் மேல் பண பரிவர்த்தனை செய்யும் போதும் பான் மற்றும் ஆதார் எண்களை குறிப்பிட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், வருமான வரி முதன்மை இயக்குனர் ஜெனரல் அல்லது முதன்மை இயக்குனரால் அங்கீகரிக்கப்பட்ட நபரிடம் மட்டுமே நிரந்தர கணக்கு எண் மற்றும் பான் எண் அல்லது ஆதார் எண் மற்றும் மக்கள் தொகை தகவல் அல்லது தனி நபரின் பயோமெட்ரிக் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று வங்கி வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

அதிக மதிப்புள்ள பணப்பரிவர்த்தனையை வருமான வரித்துறை கண்காணிக்க ஏதுவாக இருக்கும் வகையிலும், நிதி மோசடிகளை குறைக்கும் நோக்கத்திலும் வங்கி வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனையின் போது இத்தகைய விதிகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
pan
இந்த நடைமுறை, தற்போது அனைவரும் பான் மற்றும் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பான் கார்டு இல்லாதவர்களின் விவரங்களை பதிவு செய்யவும் வங்கிகளுக்கு உதவியாக இருக்கும்.

வாடிக்கையாளர்கள் சிலர் அதிக அளவில் பணத்தை டெபாசிட் செய்யும் போதும் எடுக்கும் போதும் தங்களிடம் பான் கார்டு இல்லை என கூறி தப்பித்து வருகின்றனர். மேலும், வருமான வரி செலுத்தாதவர்களை கண்டுபிக்கவும் இந்த நடவடிக்கை நல்ல பலனை கொடுக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.