Movie prime

ரயில்வே அதிரடி!! ரயில்களில் இனி லக்கேஜ்களுக்கு கட்டணம்!!

 
lugage
இனி ரயில் பயணிகளிடம் அதிக அளவில் எடுத்து செல்லப்படும் லக்கேஜ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு ரயில்களில் பயணிப்பவர்கள் அதிகப்படியான லக்கேஜ்களை கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், ஊர் விட்டு ஊர் வந்து பிழைப்பு நடத்துபவர்கள் உடமைகளை எடுத்து செல்வதற்கு ரயில் சேவையையே பெரிதளவு நம்பி உள்ளனர்.

இந்த நிலையில், இனி அதிக எடை கொண்ட லக்கேஜ்களை கொண்டு செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி ஏசி வகுப்பில் 70 கிலோ வரை லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. அதே வகையில், ஏசி 2டயர் படுக்கை, முதல் வகுப்பில் 50 கிலோ எடை வரையிலான லக்கேஜ்கள் அனுமதிக்கப்படுகின்றன. மேலும், இரண்டாம் வகுப்பு பெட்டியில் 40 கிலோ வரையிலான லக்கேஜ்கள் வரை அனுமதிக்கப்படுகின்றன.
train
அதே போல், முன்பதிவு செய்யாத பொது பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் 35 கிலோ வரையிலான லக்கேஜ்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட அளவை விட அளவுகளை மீறி அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்துச் செல்லும் பட்சத்தில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதனால் இனி ரயிலில், வரும் காலங்களில் அதிக அளவிலான லக்கேஜ்களை பயணிகள் எடுத்து செல்வது குறையும் என்றும், பார்சல் அலுவலகத்திற்கு லக்கேஜ்களை முன்பதிவு அதிகளவில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.