Movie prime

வெற்றிகரமாக 2 செயற்கைகோள்களுடன் எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாய்ந்தது!!

இன்று இரண்டு செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்.
 
sslv
இன்று இரண்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ பிஎஸ்எல்வி , ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்டுகள் உதவியுடன் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.

அவற்றில் பிஎஸ்எல்வி ராக்கெட் 1800 கிலோ வரையிலும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் 4000 கிலோ வரையிலும் எடை கொண்ட செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. மைக்ரோ - நானோ என்கிற 500 கிலோ வரையிலான செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில் எஸ்எஸ்எல்வி எனப்படும் ஸ்மால் சாட்டிலைட் லான்ச் வெகிக்கிள் ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்திருக்கிறது.
sslv
இந்த ராக்கெட் இன்று காலை 9.18 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இதில் இருக்கும் இ.ஓ.எஸ் - 2 செயற்கைக்கோள் 145 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் பூமியை கண்காணிக்கும் பணிகளை செய்யக் கூடியது. இதேபோல் 8 கிலோ எடை உடைய ஆசாதிசாட் செயற்கைக்கோளானது 75 பள்ளிகளை சேர்ந்த 75 மாணவிகள் உருவாக்கிய மென்பொருளை கொண்டது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 75 கிராமப்புற அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் 75 மாணவிகளால், சிறிய மென்பொருட்கள் அனைத்துமே உருவாக்கப்பட்டு 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' என்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த அமைப்பால் இந்த எஸ்.எஸ்.எல்.வி. ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆசாதிசாட் எனப்படும் செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த மதுரை திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகளும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது