Movie prime

அதிர்ச்சி!! விஞ்ஞானி பத்மஸ்ரீ அஜய் பரிதா மாரடைப்பால் மரணம்!!

 
ajay parida
புகழ்பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆப் லைப் சயின்சஸின் இயக்குனருமான டாக்டர் பத்மஸ்ரீ அஜய்  பரிதா கவுகாத்தியில் காலமானார். ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பகபன்பூர் கிராமத்தில் பிறந்தவர்  அஜய் பரிதா (58). இவர் அசாம் மாநிலத் தலைநகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  உயிரிழந்தார்.

அஜய் பரிதாவின் மறைவுக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசா ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால், ஆந்திரப் பிரதேச ஆளுநர் பிபி ஹரிசந்தன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் பல உயர் அதிகாரிகள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஒடிசா முதல்வர் நவீன்  பட்நாயக்கின் ட்விட்டர் பதிவில் பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானியும், இன்ஸ்டிடியூட் ஆப் லைஃப் சயின்ஸ் இயக்குனருமான புவனேஸ்வர் அஜய் பரிதா காலமானதை அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். துக்கத்தின் இந்த நேரத்தில் அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பல தலைவர்களும் விஞ்ஞானிகளும் அவருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.