அதிர்ச்சி!! இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்துள்ளது!!
Updated: Oct 20, 2022, 09:09 IST

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இந்திய ரூபாய் மதிப்பு ₹73.74 ஆக இருந்தது.
அமெரிக்க வட்டி விகிதங்கள் அதிகரிப்பு மற்றும் சர்வதேச அளவில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் பணத்தின் மதிப்பு சரிந்து வருகிறது.
இதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி யென், யூரோ, பவுண்ட் என்று பெரும்பாலான நாடுகளின் பண மதிப்பும் சரிந்து வருகிறது.
அந்த வகையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹83.02 ஆக வீழ்ச்சி அடைந்து உள்ளது.