Movie prime

அதிர்ச்சி!! குறிப்பிட்ட நேரங்களில் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாது!! பிரபல வங்கி அறிவிப்பு!!

 
debit card
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகேந்திரா வங்கியில் இருந்து சமீபத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தது. அந்த அறிவிப்பில் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வங்கியின் டெபிட் கார்டுகள் மற்றும் spendz கார்டு சேவையை பயன்படுத்த முடியாது என்ற தகவலை தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகளுக்காக வங்கிகளில் சில சமயம், பல்வேறு பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட நேரங்களில் நிறுத்தி வைக்கும் பழக்கம் உள்ளது. அதே போல தான் கோடக் மகேந்திரா வங்கி நிறுவனமும் சில திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளுக்காக டெபிட் கார்டுகள் மற்றும் spendz கார்டு சேவைகளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
kotak
குறிப்பிட்ட சில நேரத்தில் டெபிட் கார்டுகள் பயன்பாட்டில் இருக்காது, அந்த நேரத்தில் ATM களிலும் பணம் எடுக்க முடியாது, கார்டு இல்லாமலும் பணம் எடுக்க முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கியில் இருந்து வந்த மின்னஞ்சலில்,  டெபிட் கார்டு மற்றும் spendz கார்டு சேவைகளை சில மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியாது. இந்த சேவைகள் நள்ளிரவு 12 மணியில் இருந்து 2.30 மணி வரை மற்றும் 3.30 மணியில் இருந்து 6 மணி வரை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை ஒரு நாளுக்கு மட்டுமா அல்லது பராமரிப்பு பணிகளுக்காக நீடிக்க படுமா என்ற விவரம் இன்னும் வெளிவரவில்லை.