Movie prime

தேர்தல் ஆணையம் அதிரடி!! ஆதாரை வாக்காளர் அடையாள அட்டை!! இணைப்பது கட்டாயமில்லை!!

 
voter and adhaar
ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது குறித்து மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது. மேலும், மத்திய தேர்தல் ஆணையம் நேற்று இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தது.
adhaar
தேர்தல் ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக சில ஊடகங்களில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் தற்போது பதில் அளித்துள்ளது. அந்த அறிவிப்பில், சுய விருப்பத்தின் பெயரில் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்கலாம். ஆதார் எண்ணை சமர்பிக்காத போதும் வாக்காளர் பட்டியலில் உள்ள எந்த பதிவும் நீக்கப்படாது.
voter list
அதனால், வாக்காளர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை என்று தேர்தல் குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தேர்தல் குழு அறிவிப்பின்படி, ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் சேர்ப்பது அவரவர் விருப்பத்தின் அடிப்படையிலேயே செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை இழந்துவிடுவோமோ என்பது குறித்து அச்சப்பட தேவையில்லை.