Movie prime

இன்று நாட்டின் சிறந்த 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!!

 
dr radha krishnan
இன்று தேசிய நல்லாசிரியர் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தன்று, நாட்டின் சிறந்த ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
smart school
அந்த வகையில், இந்த ஆண்டு 45 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு இன்று செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி டெல்லி விக்யான் பவனில் வைத்து விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார்.
draupathi murmu
மேலும், தமிழகத்தில் இருந்து ராமநாதபுரத்தை சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் ராமசந்திரன், மற்றும் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜாவும் நல்லாசிரியர் விருது பெற உள்ளனர்