Movie prime

சோகம்!! பொது நிகழ்ச்சியில் அமைச்சர் சுட்டுக்கொலை!!

 
naba kishore das
ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாசை, உதவி எஸ் ஐ துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொன்றுள்ளார். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
naba kishore das
ஜர்சுகுதா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ்நகர் அருகே உள்ள காந்தி சவுக் பகுதியில் நேற்று மதியம் 1 மணி அளவில் பொதுமக்கள் குறைதீர்ப்பு அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சென்றுள்ளார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அவருக்கு அவரது ஆதரவாளர்களும், கட்சியினரும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது மார்பில் துப்பாக்கி குண்டுகள் சரமாரியாக பாய்ந்தன. அடுத்த வினாடி அமைச்சர் ரத்த வெள்ளத்தில் தரையில் சரிந்தார்.
naba kishore das
அமைச்சரை சுட்டது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் தான் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அமைச்சர் கீழே சரிந்ததை பார்த்த உடனே கோபால் தாஸ் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அமைச்சர் உயிருக்கு ஆபத்தான நிலையில், கொண்டுசெல்லப்பட்டார். பிறகு அங்கிருந்து ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அவரது மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
naba kishore das
இந்நிலையில், கோபால் தாஸை கைது செய்துள்ள காவல்துறையினர் அவரை தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த மாநிலம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.