Movie prime

ஆதார் - பான் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு!!

 
pan adhaar
வருமான வரிச் சட்டம் 1961 ன் பிரிவு 139AA இன் படி , ஆதார் பெற தகுதியுடைய மற்றும் பான் வைத்திருக்கும் அனைத்து நபரும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் உங்கள் ஆதாரை பான் எண்ணுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.

கடைசி தேதி வரை காத்திருக்காமல், உடனே பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பது நல்லது. நேரடி வரி விவகாரங்களுக்கான உச்ச அமைப்பான, மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT), மார்ச் 31, 2023 ஆம் தேதிக்குள் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களுடைய நிரந்தர கணக்கு எண்ணுடன் (PAN) ஆதாரை இணைக்க வேண்டியது அவசியம் என்று அறிவித்துள்ளது.
pan
மார்ச் 31, 2023 ஆம் தேதிக்குள் ஆதாரை பான் எண்ணுடன் இணைக்க தவறினால், உங்களின் 10 இலக்க பிரத்யேக எண்ணெழுத்து எண் செயல்படாது. இதுவரை உங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்காத வரி செலுத்துவோர் ₹1,000 தாமதக் கட்டணத்தைச் செலுத்தி இணைத்துக் கொள்ளலாம், அபராதம் இல்லாமல் இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30, 2022 வரை இருந்தது.

பான் கார்டுகள் மற்றும் ஆதார் கார்டுகளை கட்டாயமாக இணைப்பது முதன்மையாக போலி பான் கார்டுகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அறிவுறுத்தப்பட்டது, இது தவறான கணக்கீடு மற்றும் வரிகளை வசூலிக்க வழி வகுக்கிறது. ஒரே நபருக்கு பல பான் கார்டுகள் இருப்பதால் வரி ஏய்ப்பை கண்காணிப்பதில் அதிகாரிகளுக்கு சிரமம் ஏற்படுவதை தவிர்த்து, நாட்டில் வரி ஏய்ப்பை குறைக்கவும், இணக்கத்தை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
adhaar
இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதியே கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது, அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடைசி நாள் வருவதற்கு 3 நாட்களே இருந்த நிலையில், இன்னும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.