நாளை விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல்- 1 கவுன்டவுன் இன்று தொடக்கம்!!
Sep 1, 2023, 09:35 IST

சூரியனை ஆய்வு செய்வதற்கு நாளை இந்தியா சார்பில் விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல்- 1 விண்கலத்தின் கவுன்டவுன் இன்று தொடங்க உள்ளது. சூரியனை கண்காணித்து ஆய்வு செய்வதற்கு சூரியனின் காந்தப் புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆராய்வதற்காகவும் இந்தியாவில் இருந்து ஆதித்யா எல்- 1 விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் ஏவ உள்ளது.

இந்த ஆதித்யா எல்- 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் நாளை காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்படவுள்ளது. அதற்காக இன்று காலை 11.50 மணிக்கு 24 மணி நேர கவுண்டவுன் தொடங்கவுள்ளது.

இதற்காக ஆதித்யா எல்- 1 விண்கலம் பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட்டில் பொருத்தப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த ஆதித்யா எல்- 1 விண்கலம் பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன் என்ற இடத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது.