Movie prime

பிரதமர் அதிகாரிகளை அலர்ட்!! நாடு முழுவதும் அதிகரிக்கும் கொரோனா பரவல்!!

 
pm modi meeting
நாடு முழுவதும் கொரோனா பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அவ்வப்போது கட்டுப்பாடு விதிமுறைகள், முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது, பிரதமர் நரேந்திர மோடியும் சுகாதாரத்துறை அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.
corona new
நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களாக மீண்டும் கொரோனா பரவல் சற்று அதிகரித்துள்ளது. ஒரே நாளில் சுமார் 1,300-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பரவல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா மற்றும் இன்புளூயன்சா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். புதிய வகை கொரோனாவை விரைந்து கண்டறிய வேண்டியது அவசியம் என்று பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.

மருத்துவமனைகளில் அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்று கூறிய பிரதமர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில், முதியவர்கள் கட்டாயம் அணிய முகக்கவசம் வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
corona test
கொரோனா பரவலை வழக்கமான அடிப்படையில் நாடு முழுவதும் கண்காணிப்பது அவசியம் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். போதிய அளவில் மருந்துகளை மருத்துவமனைகளில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். தொடர்ந்து, போதிய அளவில் படுக்கைகள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, சிகிச்சைக்கான ஒத்திகைகளை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளார்.