நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை!! முன்னரே திட்டமிட்டு செயல்படுங்கள்!!

மார்ச் 31 ஆம் தேதி நிதியாண்டு முடிவடையும் நிலையில், வங்கி ஊழியர்கள் இந்த மாதம் ஆரம்பத்தில் இருந்தே பரபரப்பாக வேலை செய்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் மார்ச் மாதம் முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான வங்கி விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகைகள், உள்ளூர் திருவிழாக்கள், பொது விடுமுறை போன்ற அனைத்து தினங்களையும் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்க மாநிலத்தில் எந்த நாட்களில் வங்கி விடுமுறை என்பதை தெரிந்து கொண்டு வங்கி பணிகளை முன்னரே திட்டமிட்டு செய்லபடுங்கள்.
மார்ச் மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மார்ச் மாதத்துடன் நடப்பு நிதியாண்டு முடிவடைய உள்ளது. மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தொடங்கும் புதிய நிதியாண்டு தொடங்க உள்ளது. இந்நிலையில், ஏப்ரல் மாதத்தின் விடுமுறை தினங்களை வங்கி வாடிக்கையாளர் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
ஏப்ரல் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்
ஏப்ரல் 1 - சனிக்கிழமை - ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 2 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 4 - செவ்வாய் கிழமை - மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 5 - புதன்கிழமை - பாபு ஜக்ஜீவன் ராம் பிறந்த நாள்
ஏப்ரல் 7-வெள்ளிக்கிழமை - புனித வெள்ளி
ஏப்ரல் 8- 2 ஆவது சனிக்கிழமை
ஏப்ரல் 9 -ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 14 -வெள்ளிக்கிழமை - டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி , தமிழ் புத்தாண்டு தினம்
ஏப்ரல் 15 -சனிக்கிழமை - விஷு , பெங்காலி புத்தாண்டு
ஏப்ரல் 16 - ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 18- செவ்வாய்க்கிழமை - ஷப்-இ-கத்ர்
ஏப்ரல் 21-வெள்ளிக்கிழமை - ஈத்-உல்-பித்ர் , ரம்ஜான் ஈத்
ஏப்ரல் 22- 4 வது சனிக்கிழமை
ஏப்ரல் 23- ஞாயிற்றுக்கிழமை
ஏப்ரல் 30-ஞாயிற்றுக்கிழமை