ஆகஸ்ட் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகள் விடுமுறை!!

ஜூலை மாதம் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து முன்கூட்டியே திட்டம் தீட்டி செயல்படுவது நல்லது. அதிலும், வங்கி பணிகளில் விடுமுறை நாட்களை தெரிந்து முன்னரே எந்த நாளில் எந்த பணியை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அவசியம். அந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்து கொள்வது அவசியம். விடுமுறை நாட்களை தெரிந்து திட்டமிட்டால் கடைசி நேர பரபரப்பை தவிர்க்கலாம்.
ஆகஸ்ட் மாதத்தின் வங்கி விடுமுறை தினத்திற்கான பட்டியல்:
ஆகஸ்ட் 6 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 - செவ்வாய்கிழமை - காங்டாக் மண்டலத்தில் டெண்டாங் லோ ரம் ஃபாத் விழா
ஆகஸ்ட் 12 - 2 ஆவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 13 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15 - செவ்வாய் கிழமை - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 - புதன்கிழமை - பார்சி புத்தாண்டு பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர் மண்டலங்களில் உள்ள வங்கிகள் மட்டும் விடுமுறை
ஆகஸ்ட் 18 - வெள்ளிக்கிழமை - ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி, கௌகாத்தி வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 20 - ஞாயிற்றுக்கிழமை - விநாயகர் சதுர்த்தி
ஆகஸ்ட் 26 - 4 ஆவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 27 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28 - திங்கட்கிழமை - ஓணம் பண்டிகை கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் இயங்காது.
ஆகஸ்ட் 29 - செவ்வாய்க்கிழமை - திருவோணத்தையொட்டி, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் 30 - புதன்கிழமை ரக்ஷ பந்தன் பண்டிகையையொட்டி, ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா மண்டலங்கள் வங்கிகள் விடுமுறை