Movie prime

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!! மத்திய அமைச்சரவை!!

 
cabinet
டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல திட்டங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
government employees
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி தற்போது 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
cylinder
மேலும், வீட்டு உபயோக பயன்பாடுகளுக்கான கேஸ் சிலிண்டரின் மானியம் ₹200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் சிலிண்டருக்கு மட்டும் மானியம் ₹200 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.