Movie prime

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை ஆய்வு மையம் தகவல்!!

 
rain
மேற்கு திசை காற்று மாறுபாடு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலையாக 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
rain
மேலும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
cyclone
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிரமாக உருவாகியுள்ள "பிபோர்ஜாய்" புயல் அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு-வடகிழக்கு திசையிலும் அதன் பிறகு, அடுத்த 3 தினங்களுக்கு வடக்கு-வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.