உச்சகட்ட பரபரப்பில் சென்னை!! நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி!!
Apr 7, 2023, 09:28 IST

பிரதமர் நரேந்திர மோடி நாளை ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி சென்னை வர உள்ளார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா விமான ஊர்திகள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரம் ஐந்து அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கிட்டத்தட்ட 22,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்கவும், மேலும் பல நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கவும் நாளை வருகை தர உள்ளார்.
டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு நாளை மதியம் 2.30 மணி அளவில் வர உள்ளார். சென்னை பழைய விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. முதலில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் வரை செல்லவுள்ள வந்தே பாரத் ரயில் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

அதை தொடர்ந்து, நாளை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து பின்னர் நாளை மறுநாள் முதுமலை புலிகள் சரணாலயத்தை பார்வையிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை மற்றும் முதுமலை சரணாலயத்தில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.