பஞ்சாப்பின் முன்னாள் முதல்வர் மரணம்!! 2 நாட்கள் தேசிய துக்கம் அறிவிப்பு!!
Apr 26, 2023, 08:48 IST

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். 95 வயதாகும் அவர் பஞ்சாப் மாநிலத்தில் 5 முறை முதல்வராக இருந்துள்ளார். இவர் மூச்சு திணறல் காரணமாக மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8 மணிக்கு காலமானார்.

1947 ஆம் ஆண்டு முதன் முதலாக அரசியலில் நுழைந்த பாதல் 1952 ஆம் ஆண்டில் தனது இளம் வயதில் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அகாலி தளம் கட்சியை சேர்ந்த அவர் இதுவரை பஞ்சாப் சட்டப்பேரவைக்கு 9 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சுக்பீர்சிங் பாதல் என்ற மகனும், பர்னீத்கவுர் என்ற மகளும் உள்ளனர். இவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே என்று பல அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவை அடுத்து, நாடு முழுவதும் 2 நாள் தேசிய துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.