Movie prime

பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்தின் வட்டி அதிகரிப்பு!!

 
savings passbook
அஞ்சலகங்களில் பெண் குழந்தைகள் பெயரில் சேமிக்கப்பட்டு வரும் ‘செல்வமகள்’ சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 7.6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
savings
அதை தொடர்ந்து, வங்கிகள், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு அளிக்கும் வட்டி விகிதத்தை அதிகரித்து. தொடர்ந்து, சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு தொடர்ந்து 2 ஆவது முறையாக வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டுக்கான வட்டி விகிதத்தை நேற்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
savings money
பெண் குழந்தைகள் பெயரில் சேமிக்கப்படும் ‘செல்வமகள்’ சேமிப்பு திட்ட வட்டி விகிதம் 7.6 சதவீதத்திலிருந்து 8 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. மேலும், கிசான் விகாஸ் பத்திரத்திற்கான வட்டி, 7.2 சதவீதத்திலிருந்து 7.5 சதவீதமாகவும், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட வட்டி 8 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரம், 120 மாதங்களுக்கு பதிலாக 115 மாதங்களில் முதிர்வடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.