Movie prime

மகிழ்ச்சியான செய்தி!! ஊழியர்களுக்கு 44% சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு!!

 
Money
தற்போது இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்கள் ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெற்று வருகிறார்கள். ஆனால் இந்த சம்பளம் போதாது என்றும் அவர்கள் பரிந்துரைகளின் படி சம்பளம் பெறவில்லை என்றும் ஊழியர்களிடம் இருந்து பல புகார்கள் எழுந்த வன்னம் உள்ளன. ஆனால், அவர்கள் பெற வேண்டியதை விட அதிகமாக உள்ளது என்று அரசு சொல்லி வருகிறது. இந்தச் சூழல்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, எட்டாவது ஊதியக் குழுவை அரசு அமைத்துள்ளது.
government employees
ஊழியர் சங்கம் இது தொடர்பாக ஒரு குறிப்பாணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது விரைவில் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஊழியர் சங்கத்தின் பரிந்துரைகளை பார்த்த பின், அமல்படுத்தப்படும் என்று தெரிய வருகிறது. மறுபுறம், 8 ஆவது ஊதியத்தை அமல்படுத்துவது குறித்து அரசு எந்த பரிசீலனையும் செய்யவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தாலும், இதற்கு பிறகும், அடுத்த ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கூறுகின்றனர்.
money 4
தற்போது குறைந்தபட்ச ஊதிய வரம்பு ₹18,000 ஆக வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஊழியர்களின் அமைப்புகள் கூறுகின்றன. இதில் ஃபிட்மெண்ட் ஃபேக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்த காரணி 2.57 மடங்கு, இருப்பினும் 7வது ஊதியக் குழுவில் அதை 3.68 மடங்கு வரை வைத்திருக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால், ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ₹18 ஆயிரத்தில் இருந்து ₹26 ஆயிரமாக உயர வாய்ப்புள்ளது. மேலும், 8 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையால் சம்பள உயர்வு  44.44 சதவிகிதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.