இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!! கனமழை எதிரொலி!!
Jul 27, 2023, 09:41 IST

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நீலகிரி, காஞ்சிபுரம் போன்ற சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக, குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. மேலும், தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக, பல்வேறு மாநிலங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கேஸ் சிலிண்டர்கள், கார்கள் போன்றவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகி பதைபதைக்க செய்கிறது.

அந்த வகையில், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் பல இடங்களில் தொடர்ந்து தென்கிழக்கு பருவமழை காரணமாக வட மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதன் காரணமாக, இன்று தெலுங்கானா மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.