Movie prime

பெரும் அதிர்ச்சி!! ஓடும் ரயிலில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து!!

 
train fire
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூரில் இருந்து மத்தியப்பிரதேசத்தின் சியோனி பகுதியை நோக்கி பதல்கோட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில், உத்திரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில் பண்டாய் ரயில் நிலையத்தை ரயில் கடந்து சென்றபோது, எஞ்சியினில் இருந்து 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பெட்டிகளில் திடீரென தீப்பற்றியது.
train fire
இதை பார்த்த பயணிகள் அபாய குரல் எழுப்பி பரபரப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, பற்றி எறிந்த ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகள் கீழே குதித்து உயிர் தப்பினர். மேலும், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்தி தீயை அணைத்தனர், முன்னெச்சரிக்கையாக ரயிலின் 4 பெட்டிகள் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பயணிகள் காயமடைந்ததாக கூறப்பட்டுள்ளது.
hospital
காயமடைந்த பயணிகள் ஆக்ராவில் உள்ள எஸ். என்.மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த திடீர் தீ விபத்தில் மூன்று மற்றும் நான்காவது பெட்டிகள் முழுவதுமாக எரிந்து நாசமானது, இரண்டு பெட்டிகள் சேதமடைந்தது. இந்த தீ விபத்து குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.