Movie prime

மேகவெடிப்பால் ஏற்பட்ட நிலச்சரிவு!! பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!!

 
shimla
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இமாச்சலபிரதேச மாநிலத்தில் மிக கனமழை கொட்டியது. இந்த கனமழை காரணமாக, சிம்லாவில் உள்ள சம்மர்ஹில் மற்றும் பாக்லி ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. சம்மர்ஹில்லில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டு இருந்த போது இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
himachal landslide
இதுவரை அந்த இடத்தில் மட்டும் 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 10 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாக்லியில் வீடுகள் சரிந்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில், நேற்று முன்திம் இரவும் கனமழை கொட்டியதால் மீட்பு பணிகள் தாமதமடைந்தன.

மீண்டும் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை இணைந்து சம்மர்ஹில் சிவன் கோயிலில் மீட்பு பணிகளை தொடங்கிய நிலையில், 2 சடலங்கள் மீட்கப்பட்டது. இந்நிலையில், நேற்று திடீரென தலைநகர் சிம்லாவின் கிருஷ்ணா பகுதியில் நிலச் சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில், 8 வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில், அந்த வீடுகளில் இருந்தவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.
landslide
இந்நிலையில், நேற்று இரவு 10 மணி வரை நடந்த மீட்பு பணியில், 2 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் மண்ணில் புதைந்து கிடப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, இமாச்சலில் மேகவெடிப்பால் ஏற்பட்ட பாதிப்பு, வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.