Movie prime

நாடு முழுவதும் மே 7 நீட் தேர்வு!! 499 மையங்கள்!! தேவையான முழு விவரம்??

 
neet
மே மாதம் 7 ஆம் தேதி நீட் தேர்வுகள் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் பதற்றப்படாதீங்க. அவகாசம் இருக்கு. பொறுமையாக அரசு அறிவித்துள்ள இணையதளத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வது நல்லது. உங்களுடைய தேர்வு மையத்தையும், அதற்கு செல்வதற்கான வழியையும் முன்னரே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க. கடைசி நேரத்துல வழி தெரியாமலோ, தாமதமாக சென்று அவதிப்படுவதையோ தவிர்க்கலாம். தாமதமாக சென்றால் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நீட் தேர்வில் தேர்ச்சியடையவது மட்டுமே வாழ்க்கை கிடையாது.
neet
படிப்பும், பதவியும், வேலையும் வாழ்க்கையில் ஒரு பகுதி தான். அதை விட ரொம்ப முக்கியம் உங்களோட எதிர்காலம். அதனால தவறான முடிவுகளைப் பற்றி யோசிச்சு கூட பார்க்காதீங்க. மருத்துவ படிப்புகளை படிப்பதற்கு 12ம் வகுப்புக்கு பிறகு மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டியது கடந்த சில வருடங்களாக இந்தியாவில் அவசியம். இந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமை மூலம் இந்தியா முழுவதும் ஒரே நாளில் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை, முதுநிலை ஒவ்வொரு கட்டத்திலும் தனித்தனியாக தேர்வுகளை எழுத வேண்டியது அவசியம். அந்த வகையில் நடப்பாண்டில் நீட் தேர்வுகள் மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் தயாராகி வரும் நிலையில் தேர்வு மையங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் மே7ம் தேதி  இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுகள்  நடைபெற உள்ளது. இந்நிலையில்  நீட் தேர்வு நடைபெறும் மையங்கள் குறித்த விவரங்களை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுக்காக  499 நகரங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
neet
அத்துடன் தேர்வு மையங்கள் குறித்த விவரங்களையும் தேசிய தேர்வு முகமை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள், மாணவர்கள் அதை பார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும் படியும் அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் NTA NEET அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.neet.nta.nic.in அல்லது www.nta.ac.in ல் தேர்வு மைய தகவலை தெரிந்து கொள்ளலாம் .நீட் தேர்வு மே 7ம் தேதி மதியம் 2:00 முதல் 5:20 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது என்று 13 மொழிகளில் நடத்தப்படுகிறது.