புதிய அப்டேட்!! இனி ரயிலில் வாட்ஸ் அப்பில் உணவு ஆர்டர் செய்யலாம்!!
Feb 7, 2023, 10:12 IST

இனிமேல் ரயில் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக உணவை முன்பதிவு செய்துகொள்ளலாம். தற்போது, இந்த புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதி ரயிலில் அதிக நேரம் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக, 8750001323 என்ற வாட்ஸ் அப் எண்ணை இந்தியன் ரயில்வே அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்தால் ரயிலில் இருக்கைக்கே உணவு வந்துவிடும்.

இதன் முதற்கட்டமாக குறிப்பிட்ட சில ரயில்களில் மட்டும் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் விரிவுபடுத்தப்படும் என்று IRCTC நிறுவனம் அறிவித்துள்ளது.