Movie prime

கனமழையால் தத்தளிக்கும் வடமாநிலங்கள்!! தொடர்ந்து உயரும் உயிரிழப்புகள்!!

 
flood
டெல்லி, ஹரியானா, இமாச்சல், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையால் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு சில இடங்களில் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.
heavy rain
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் டோக்ரா ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு ராணுவ வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடு இடி விழுந்து 6 வயது சிறுமி உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ராஜஸ்தானில் ஏற்பட்ட கனமழை காரணமாக ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், தோடா மாவட்டத்தில் தாத்ரி-ன்டோ சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் இருந்து ரிஷிகேஷ் சென்று கொண்டிருந்த வாகனம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாறைகள் உருண்டு பேருந்து மீது விழுந்ததில் பேருந்து கங்கா ஆற்றில் விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
brazil landslide
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே நாளில் 34 பேர் பலியாகி உள்ளனர். மேலும், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி நேற்று ஒரே நாளில் இமாச்சலில் 30 பேர் பலியாகி உள்ளனர். இவ்வாறு தொடர் கனமழை மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் காரணமாக மக்கள் சோகத்தில் உள்ளனர்.