Movie prime

திட்டமிட்டு செயல்படுங்கள்!! மே மாதம் 12 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை!!

 
bank holiday
ஒவ்வொரு மாதமும் வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி அதற்கு முந்தைய மாதம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் மே மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்தில் மொத்தம் 12 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களை அறிந்து அதற்கு ஏற்றவாறு வங்கி பணிகளை திட்டமிட்டு செயல்படுவது நல்லது.
bank holiday
மே 1ம் தேதி - மே தினம், பொது விடுமுறை

மே 5ம் தேதி - புத்த பூர்ணிமா டெல்லி, ஹரியானா, பஞ்சாப், அசாம், உத்ரகாண்ட், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 7ம் தேதி - ஞாயிறு விடுமுறை

மே 9ம் தேதி - ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள்
 
மே 13ம் தேதி - இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை

மே 14ம் தேதி -  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
bank holiday
மே 16ம் தேதி - சிக்கிம் தினம்

மே 21ம் தேதி - ஞாயிறு விடுமுறை

மே 22ம் தேதி - மகாராணா பிரதாப் ஜெயந்தி குஜராத், இமாச்சல பிரதேசம், ராஜஸ்தான்,ஹரியானா ஆகிய மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 24ம் தேதி -  காசி நஸ்ருல் இஸ்லாம் ஜெயந்தி, திரிபுரா பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை

மே 27ம் தேதி - நான்காவது சனிக்கிழமை விடுமுறை

மே 28ம் தேதி - ஞாயிறு விடுமுறை