பிரதமர் மோடியின் சகோதரர் சென்னை மருத்துவமனையில் அனுமதி!!
Feb 28, 2023, 09:11 IST

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்த தாமோதர்தாஸ் முலச்சந்த் மோடி - ஹீராபென் மோடி தம்பதியின் 3 ஆவது மகன் பிரதமர் நரேந்திர மோடி. இந்த தம்பதிக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் சேர்த்து மொத்தம் 6 பிள்ளைகள். அதில் பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர்களில் ஒருவர், பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி.

அவர் சிறுநீரக பிரச்சனையால் சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், அதற்கு சிகிச்சை பெறுவதற்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.