தமிழ்நாட்டிற்கு இன்று வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!!
Updated: Oct 26, 2023, 09:55 IST

இரண்டு நாள் பயணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். சென்னை அருகே உள்ள உத்தண்டியில் கடல் சார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த கடல்சார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

இரண்டு நாள் பயணமாக பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று அக்டோபர் 26 ஆம் தேதி பெங்களூருவில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு விமானம் மூலம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சென்னை வருகிறார். இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று அங்கு தங்க உள்ளார்.

நாளை காலை ஆளுநர் மாளிகையில் அவரை சில முக்கிய பிரமுகர்கள் சந்திக்க உள்ளனர். அதன் பின்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடல்சார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் நாளை பிற்பகல் 12 மணி அளவில் சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் செல்ல உள்ளார்.