Movie prime

நாளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தமிழ்நாடு வருகை!!

 
draupathi murmu
நாளை பிப்ரவரி 18 ஆம் தேதி இந்தியா முழுவதும் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதை தொடர்ந்து, அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த சிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார்.
draupathi murmu
குடியரசு தலைவர் பதிவு ஏற்ற பிறகு முதல் முறையாக தமிழ்நாட்டிற்கு வருகிறார், திரௌபதி முர்மு. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல் 12 மணி அளவில் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வரவுள்ளார்.

அவரது வருகையை முன்னிட்டு மதுரை முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மதுரையில் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து நாளை மாலை கோவை மாநிலத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க உள்ளார்.
athiyogi
அதன் காரணமாக, அங்கும் பாதுகாப்பு பணிகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சோதனைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளது. மேலும், 17, 18 ஆகிய தேதிகளில் ஆளில்லா விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் பறக்க மதுரை மாவட்டத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.