Movie prime

அரிசி விலை உயர வாய்ப்புள்ளது!! அரிசி மீதுள்ள ஏற்றுமதி வரி நீக்கம்!!

 
rice
கடந்த ஆண்டு உக்ரைன் ரஷ்யா நாட்டு போரின் காரணமாக சர்வதேச அளவில் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கோதுமை ஏற்றுமதியை அதிகரித்தனர். அந்த காரணத்தால் உள்நாட்டில் கோதுமை விலை உயர்ந்த நிலையில், கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் தடை விதிக்கப்பட்டது.
rice
அந்த வகையில், இந்தியாவில் இருந்து புழுங்கல் அரிசி மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை பல நாடுகள் அதிகமாக வாங்க தொடங்கின. இதனால் உள்நாட்டில் அரசுகளின் விலை கணிசமாக உயர தொடங்கின. இதன் காரணமாக, அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அரிசி ஏற்றுமதி மீது 20% வரி விதித்து அறிவித்தது.

தற்போது காரிப் பருவத்தின் கொள்முதல் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வாரம் மத்திய உணவு அமைச்சகத்தின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், காரீப் பருவத்தின் கொள்முதல் சீசன் முடிவடைந்த நிலையில் உள்நாட்டில் தேவையை சமாளிக்கும் வகையில் போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
rice
இதன் காரணமாக, அரிசி ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியதோடு 20 சதவிகித வரி உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.  அதனால்,அரிசி ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், உள்நாட்டில் போதிய அளவு அரிசி இருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அரிசி ஏற்றுமதி அதிகரிப்பால் உள்நாட்டில் அரிசி விலை உயர வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.