அதிர்ச்சி!! பதிண்டா துப்பாக்கி சூட்டில் 2 தமிழக வீரர்கள் உள்ளிட்ட 4 பேர் பலி!!
Apr 13, 2023, 10:07 IST

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் உயிரிழந்த இரண்டு தமிழக வீரர்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. நாட்டின் மிக பெரிய ராணுவ முகாம்களில் ஒன்று பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாம்.

இந்த முகாமில் இந்திய ராணுவத்தின் அனைத்து படைப்பிரிவுகளும் செயல்பட்டு வருகிறது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த முகாமில் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு அறையில் தூங்கி கொண்டிருந்த சாகர் பானே (25), யோகேஷ் குமார் (24) ஆகிய இருவர் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
மேலும், மற்றொரு அறையில் சந்தோஷ் நாகரால் (25), கமலேஷ் (24) ஆகிய இருவரும் துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதில் கமலேஷ், யோகேஷ் குமார் ஆகிய இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் என்றும் மற்ற இருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வீரர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பஞ்சாப் போலீசாருடன் சேர்ந்தது ராணுவத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ராணுவ வீரர் ஒருவர் 2 மர்ம நபர்கள் வெள்ளை பைஜாமா அணிந்து கையில் துப்பாக்கி மற்றும் கோடாரியுடன் வெளியே வந்ததை பார்த்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு வீரர்களின் உடலுக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு ராணுவ மரியாதையுடன் அவர்களது உடல் அடக்கம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.