அதிர்ச்சி!! ஒரே நாளில் 5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்று!!
Updated: Apr 7, 2023, 09:06 IST

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, நாடு முழுவதும் கொரோனா பரவலும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அவ்வப்போது கட்டுப்பாடு விதிமுறைகள், முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் முதலில் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆன நிலையிலும் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்த பாடில்லை.

அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,325 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று காரணமாக 23,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.