Movie prime

அதிர்ச்சி!! இந்தியாவில் தினமும் 5,500 குழந்தைகள் புகை பழக்கத்திற்கு அடிமை!!

 
smoking
பிரபல தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் தேசிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட முதன்மை விசாரணை அதிகாரியுமான நரேஷ் புரோகித் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பெட்டியில், உலக அளவில் அதிக புகையிலை பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா 2 ஆவது இடத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
smoking
இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 26 கோடியே 80 லட்சம் நபர்கள் புகையிலையை பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல், இந்தியாவில் 5,500 குழந்தைகள் தினமும் புகையிலை பழக்கத்திற்கு அடிமை ஆக்கப்படுகிறார்கள். அதில் மூன்றில் ஒரு பங்கு பேர் புற்றுநோய், மாரடைப்பு, மூளை பக்கவாதம், ஆஸ்துமா போன்ற நோய்களின் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

அதுமட்டுமின்றி, ஒருவர் புகைக்கும் போது அருகில் இருந்து அந்த காற்றை சுவாசிக்கும் நபருக்கும் அதே நிலை தான். நம் நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் நபர்கள் புகை பிடிப்பதால் மரணமடைகிறார்கள். அதுமட்டுமின்றி நம் நாட்டில் புற்றுநோய் மரணங்களில் 27% மரணங்களுக்கு புகையிலை தான் காரணமாக உள்ளது.
child smoking
இன்னும் நமது நாட்டில் குறிப்பிட்ட சில பகுதிகளில் புகை பிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதை தடை செய்து 100% புகை பிடிப்பதற்கு தடை விதித்தால் மட்டுமே இந்த பாதிப்புகளை சற்று குறைக்க முடியும் என்று, நரேஷ் புரோகித் கூறியுள்ளார்.