Movie prime

அதிர்ச்சி!! ராட்சத கிரேன் இயந்திரம் கவிழ்ந்து பயங்கர விபத்து!! 15 பேர் பலி!!

 
thane accident
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய வாழ்க்கை சூழலில் யாருக்கு எப்போது எந்த வகையில் விபத்து ஏற்படும் என்று பயந்து பயந்து வாழும் நிலை உண்டாகிவிட்டது.
ndrf rescue
நெடுஞ்சாலையில் ஏற்படும் வாகன விபத்துகள், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தை, கட்டிடங்களில் எதிர்பாராத தீ விபத்து, திடீரென கட்டிடம் இடிந்து விழுவது, ரயில் விபத்து போன்ற பல எதிர்பாராத சூழல்களில் விபத்துகள் நடந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

ராட்சத கிரேன் இயந்திரம் உதவிகளுடன் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வந்த போது, எதிர்பாராத விதமாக ராட்சத கிரேன் இயந்திரம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்பாராத விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
thane accident
இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.