Movie prime

அதிர்ச்சி!! வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு!!

 
cylinder
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. மாதத்தின் முதல் நாளான இன்று வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்துள்ளன.
gas cylinder
வீட்டு உபயோக சிலிண்டரின் விலையை மாற்றி அமைத்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ₹50 அதிகரித்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Money
இதற்கு முன்பு, ₹1070.50 க்கு விற்கப்பட்ட வீடு உபயோக சிலிண்டர் தற்போது ₹50 விலை உயர்ந்ததால், ₹1120.50 க்கு விற்கப்படுகிறது. இந்த விலை உயர்வு, ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.