Movie prime

அதிர்ச்சி!! கல்பனா சாவ்லாவின் தந்தை காலமானார்!! பிரபலங்கள் இரங்கல்!!

 
chawla
இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. நாட்டிலேயே முதல் பெண்ணாக விண்வெளிக்கு சென்று சாதனை படைத்த கல்பனா சாவ்லா கடந்த 2003-ம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார். ஹரியானாவின் கர்னல் பகுதியைச் சேர்ந்த கல்பனா பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோநாடிகல் எஞ்னியரிங் படித்தவர்.
chawla
அதைத் தொடர்ந்து அமெரிக்கா சென்று முதுநிலை படிப்பு படித்து, அதைத்தொடர்ந்து முனைவர் பட்டமும் பெற்றார். இதற்கு எல்லாம் பெரும் ஆதரவாக இருந்தவர் கல்பனா சாவ்லாவின் தந்தை பனராசிலால் சாவ்லா. வயது மூப்பு காரணமாக இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
rip
கடந்த சில நாட்களாக ஹரியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பனராசிலால் சாவ்லாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததை அடுத்து பனராசிலால் சாவ்லா தனது 90 வயதில் உயிரிழந்துள்ளார்.