அதிர்ச்சி!! முதல்வரின் சகோதரி காலமானார்!! பிரதமர் இரங்கல்!!
Sep 17, 2023, 09:42 IST

ஒடிசா மாநில முதல்வரின் சகோதரி கீதா மேத்தா. இவர் பிரபல எழுத்தாளரும் கூட. இவர் உடல் நலக் குறைபாடு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். 80 வயதாகும் இவர் 1943ல் தலைநகர் டெல்லியில் பிறந்த கீதா மேத்தா, பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவா். பிரபல எழுத்தாளரான இவா், ‘கா்ம கோலா’, ‘ஸ்னேக் அன்ட் லேடா்ஸ்’, ‘எ ரிவா் சூத்ரா’, ‘ராஜ்’, ‘தி எடா்னல் கணேசா’ உட்பட பல நூல்களை எழுதியவர். கீதா மேத்தா எழுத்தாளர், பத்திரிகையாளர், ஆவணப்பட இயக்குநர் என பன்முகத் திறமை வாய்ந்தவர்.

இவர் கடந்த சில காலமாகவே வயது மூப்பு காரணமாக உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் டெல்லியில் உள்ள தனது வீட்டில் காலமானார். கீதா மேத்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி“ எழுத்தாளர் கீதா மேத்தா பன்முகத்தன்மை கொண்ட ஆளுமையாக இருந்தாா்.

அறிவுத்திறன், எழுத்து மற்றும் ஆவணப்பட இயக்கம் தாண்டி, இயற்கை மற்றும் குடிநீர் பாதுகாப்பிலும் தீவிரமாக செயல்பட்டவர். அவரது மறைவு வருத்தம் அளிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார். பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கீதா மேத்தா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.