மாணவர்களே மிஸ் பண்ணிடாதிங்க!! நீட் தேர்வு விண்ணப்பத்திற்கு இன்றே கடைசி!!
Apr 13, 2023, 09:10 IST

இந்தியாவில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்து படிப்பதற்கு நீட் நுழைவுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு நீட் தேர்வுகள் வரும் மே மாதம் 7 ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று ஏப்ரல் 13 ஆம் தேதி இரவு 11.30 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ படிப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாணவர்கள் வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பித்து விடுங்கள்.

மேலும், இந்த தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுவரை தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த நீட் தேர்வில் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் படி, 720 மதிப்பெண்களுக்கு 180 கேள்விகள் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடப் பிரிவுகளில் இருந்து கேட்கப்படும்.