Movie prime

அதிர்ச்சியில் மாணவர்கள்!! நீட் தேர்வு விண்ணப்ப கட்டணம் அதிகரிப்பு!!

 
students
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர்ந்து படிப்பதற்கு நீட் நுழைவு தேர்வுகள் எழுத வேண்டியது கட்டாயம். அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடத்தப்பட்டு வருகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் போன்ற 13 மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
neet
அதன்படி, 2023 -2024 கல்வியாண்டிற்கான இளநிலை நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவங்கள் https://neet.nta.nic.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கான ஹால் டிக்கெட் மற்றும்  தேர்வு தொடர்பான மற்ற தகவல்கள் பின்னர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
neet
இந்நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம் கடந்த ஆண்டைவிட ₹100 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கு ₹1700 ஆகவும், ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு ₹1,600 ஆகவும் மற்றும் பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ₹1,000 ஆகவும் கட்டணம் உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.