மாணவர்கள் மகிழ்ச்சி!! நாளை முதல் 10 நாட்கள் விடுமுறை!!

கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இருந்த போதும், காய்ச்சல் பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான மக்கள் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது அதிகமாக பரவி வரும் இன்புளுயன்சா காய்ச்சல் சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். முதல் வகை - லேசான காய்ச்சல், இருமல் இருக்கும் என்றும், 2 ஆம் வகை - தீவிர காய்ச்சல், அதிக இருமல் இருக்கும் என்றும், 3 ஆம் வகை - தீவிர காய்ச்சல், தொண்டை வலி மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், சமூக இடைவெளி , முகக்கவசம் இவைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் அதிகம் பரவுவதாக கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை மார்ச் 16 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் மார்ச் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து 10 நாட்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில், சமீபகாலமாக வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருவதால், ஏராளமானோர் பாதிப்படைந்து வருவதாலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை புதுச்சேரி சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.