Movie prime

இன்றே கடைசி!! மறக்காம ஆதார் - பான் கார்டை இணையுங்கள்!!

 
pan adhaar
ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. அதனால் இதுவரை இணைக்காதவர்கள் நாளை முதல் ₹1000 அபராதத்துடன் இணைக்க நேரிடும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு வரி ஏய்ப்பு, போலி ஆதார் மற்றும் பான் கார்டுகள் மற்றும் மோசடி ஆகியவற்றை தடுக்கும் வகையில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
adhaar
இந்நிலையில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு 2023 மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்த கால அவகாசம் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதனால் இன்றைய நாளுக்குள் அனைவரும் ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டது.
pan
இன்றுடன் அவகாசம் நிறைவடையும் நிலையில், ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைக்காதவர்கள், நாளை முதல் ₹1000 அபராத தொகை செலுத்திய பிறகே இணைக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் ஆதாருடன் பான் கார்டை இணைக்காத பான் கார்டு எண் செயல்படாது என்றும், செயல்படாத பான் கார்டு எண்ணை வைத்து வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.