Movie prime

இன்றே கடைசி!! ₹2,000 வங்கிகளில் மாற்ற இன்றே கடைசி நாள்!!

 
2000
இன்று செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ₹2000 நோட்டை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கடைசி நாள் என்பதால் அனைவரும் நோட்டை மாற்றிவிடுங்கள். கடந்த 2016 ஆம் ஆண்டு ₹500 மற்றும் ₹1,000 நோட்டுகள் பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு இந்த ₹2,000 நோட்டுகளை ஆர்பிஐ வெளியிட்டது. இந்நிலையில், ₹2,000 நோட்டுகளை நாட்டின் பணப் புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக ஆர்பிஐ கடந்த மே மாதம் அறிவித்தது.
money 2
அந்த வகையில், மே மாதம் 23 ஆம் தேதி முதல், பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள ₹2,000 நோட்டுகளை செப்டம்பர் 30, 2023 ஆம் தேதி வரை இந்திய ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு பணத் தாள்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் ஆர்பிஐ தெரிவித்தது. ஒருவர் ஒருமுறை ₹20,000 மதிப்புள்ள 2,000 நோட்டுகளை மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும் என்றும் தெரிவித்திருந்தது.
2000
இந்நிலையில், இன்று செப்டம்பர் 30 ஆம் தேதி என்பதால் ₹2000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கிகளிலோ, குறிப்பிட்ட ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் செலுத்தி மாற்றி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.