சோகம்!! 9 நாட்களில் 40 குழந்தைகள் பலி!! தீயாய் பரவும் வைரஸ்!!
Mar 6, 2023, 09:25 IST

இந்தியாவில் சமீப காலமாக சில இடங்களில் அடினோ வைரஸின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் அடினோ வைரஸ் பாதிப்பின் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அடினோ வைரஸ் குழு நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகிய உடல் உறுப்புகளை பாதிக்கக்கூடியது.

பெரியவர்களை விட சிறு குழந்தைகளுக்கு தான் இந்த வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த அடினோ வைரஸ் பாதிப்பால் கடந்த 9 நாட்களில் மட்டும் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. நேற்று காலை மேற்கு வங்கத்தில் உள்ள பி.சி. ராய் குழந்தைகள் மருத்துவமனையில் அதிஃபா காதுன் என்ற ஒன்றரை வயது குழந்தை, அர்மன் காசி என்ற 4 வயது சிறுவன் ஆகிய இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து, நேற்று மாலை அதே மருத்துவமனையில் மேலும் நான்கு குழந்தைகள் உயிரிழந்துள்ளது பதிவாகி உள்ளது. அடினோ வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கு என்று இதுவரை எந்த மருந்தும் பரிந்துரைக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 9 நாட்களில் மட்டும் 40 குழந்தைகள் அடினோ வைரஸ் நோய் பாதிப்பால் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.