Movie prime

சோகம்!! உச்சி வெயிலில் அரசு நிகழ்ச்சி!! 11 பேர் உயிரிழப்பு!!

 
award ceremony
மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு சார்பில் மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கும் நிகழ்ச்சி, நேற்று நண்பகலில் நவி மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சமூக ஆர்வலர் அப்பா சாகேப் தர்மாதிகாரி-க்கு விருது வழங்கி கவுரவித்தார்.
crowd
இந்த விழாவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிலையில், இந்த விழாவிற்கு மாநிலம் முழுவதிலுமிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆனால், இந்த விழாவில் முக்கிய நபர்களுக்கு மட்டுமே மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 38 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானதால், நூற்றுக்கணக்கான பொதுமக்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.
crowd
இதை தொடர்ந்து, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 24 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.