Movie prime

சோகம்!! ஐஐடி மாணவர் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!

 
suicide
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பொவாய் பகுதியில் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்த 18 வயது தர்சன் சோலங்கி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.
iit munbai
இந்த மாணவன் பி.டெக் இயந்திரவியல் பிரிவில் முதலாம் ஆண்டு ஐ.ஐ.டி.யின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், 7 ஆவது மாடியில் இருந்து குதித்து தர்ஷன் தற்கொலை செய்து கொண்டார். விடுதி கண்காணிப்பாளர் இது குறித்த தகவலை காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து வந்த காவல்துறையினர் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
iit
இந்த சம்பவம் குறித்து விடுதி கண்காணிப்பாளர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.